Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; Blogger_Importer has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\blogger-importer\blogger-importer.php on line 44

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; MT_Import has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\movabletype-importer\movabletype-importer.php on line 32

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; RSS_Import has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\rss-importer\rss-importer.php on line 43

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; WP_Categories_to_Tags has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\wpcat2tag-importer\wpcat2tag-importer.php on line 31
“இஸ்லாமியருக்கு துரோகம் இழைக்கும் திமுக!” : வேலூர் இப்ராஹிம் காட்டம்! - Thandoravoice

“இஸ்லாமியருக்கு துரோகம் இழைக்கும் திமுக!” : வேலூர் இப்ராஹிம் காட்டம்!

“இஸ்லாமியர்களுக்கு தி.மு.க.தான் பலவித நன்மைகளைச் செய்து வருகிறது!’ என அக்கட்சித் தலைவர்கள் கூறி வருகிறார்களே!” என்று, ‘தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத்’ தலைவர் வேலூர் இப்ராஹிமிடம் கேட்டோம்.
அவர் நமக்களித்த பதில்:
“ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2006ம் ஆண்டு சிறுபான்மை நல பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் புதுப்பிக்கப்பட்டு, அதில் திருத்தம் கொண்டு வர, ஓராண்டு காலம் நிர்ணயம் செய்யப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி, அந்த ஆணையத்தை கலைத்துவிட்டார்.
அதற்கு பதிலாக, சிறுபான்மை மக்கள் நல ஆணையம் அமைக்க, வரைமுறைகளை ஏற்படுத்த இரண்டு ஆண்டு அவகாசம் அளித்தார். அதில் இஸ்லாமியர்களுக்கு இடமளிக்கவே இல்லை.
இஸ்லாமிய மக்கள், ‘156 ஜாதியில் ஒரு ஜாதியாக இருக்கிறோம். அதிலிருந்து எங்களை தனியாக பிரித்துவிடுங்கள்’ என்று கேட்டதற்கு, முடியாது என்று சொன்னவர்தான் கருணாநிதி.
‘தி.மு.க., அரசில், இஸ்லாமியர்கள் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்று வெள்ளை அறிக்கை விட வேண்டும்’ என்று கேட்டதற்கு இறுதிவரை கருணாநிதி பதில் அளிக்கவே இல்லை.
வக்பு போர்டுக்கு சொந்தமான ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அன்னியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று வக்பு போர்டின் அப்போதைய தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார். அதையும் கருணாநிதி தலைமையிலான அப்போதைய தி.மு.க அரசு கண்டுகொள்ளவில்லை.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் அக்கட்சித் தலைவர் கருணாநிதி, இஸ்லாமியர்களை தீவிரவாதி என கூறினார்.
இந்தத் துரோகம், தற்போது ஸ்டாலின் காலத்திலும் தொடர்கிறது. இன்று தி.மு.க.வில் மாவட்ட மாநில பொறுப்புகளில் எத்தனை இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்துப் பார்த்தாலே, இஸ்லாமிய மக்களுக்கு திமுக செய்யும் துரோகம் புரிந்துவிடும்!” என ஆவேசமாக சொல்லி முடித்தார் வேலூர் இப்ராஹிம்.
பாக்ஸ்:
இப்ராஹிம் மேலும் கூறியதாவது:
“உலமாக்களுக்கு முதலில் எம்.ஜி.ஆர்., தான் பென்ஷன் வழங்கினார். வக்பு போர்டுக்கு கட்டடம் கட்ட எம்.ஜி.ஆர்., தான் நிலம் அளித்து உதவினார்; ஜெயலலிதா கட்டடம் கட்டிக் கொடுத்தார்.
தற்போது, முதல்வர் இ.பி.எஸ், அரசு பணிகளில் நேரடி நியமனத்தில், இஸ்லாமியர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32ஆக உயர்த்தி உள்ளார். இப்படி அ.தி.மு.க.தான் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எப்போதும் இருக்கிறது!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *