அ.தி.மு.க. – தி.மு.க…. வித்தியாசம் என்ன?

1
கா.கலைச்செல்வன், கடலூர்
கே: உலகில் மிக மோசமான விலங்கு எது?
ப: ‘மனிதன் என்பவன் மிக மோசமான விலங்கினம்!’ – சொன்னவர், -ஃப்ரெட்ரிக் நீட்சே.
2
எல்.சஞ்சீவ், மதுக்கூர்
கே: அதிமுக – திமுக.. வித்தியாசம் என்ன?
ப: பல உண்டு… அதில் முக்கியமானது, வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்தாலும் ஒறறுமையாய் இணைந்து செயல்படுவபவர்களைக் கொண்ட கட்சி, அதிமுக! ஒரே தாய் வயிற்றில் பிறந்தாலும்.. ஒரே தந்தைக்கு பிறந்ததாக சொல்லப்பட்டாலும் அடித்துக்கொண்டு… கொலைபாதகம் வரை செல்லும் நபர்களைக் கொண்ட கட்சி திமுக!
3
ஜே. பிரிட்டோ, செங்கல்பட்டு
கே: ‘வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிரக சட்டசபையை கூட்டி தீர்மானம் இயற்ற வேண்டும்!’ என்கிறாரே திமுக தலைவர் ஸ்டாலின்?
ப: இச்சட்டை விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வரவேற்கும்போது, எதற்காக எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்? அப்படி எதிரானது உண்மை என்றால் நிச்சயம், அதிமுக அரசு தீர்மானம் கொண்டு வந்திருக்கும்.
அனைத்துத் தரப்பினரும் கண்டனம் தெரிவித்த, இலங்கை இனப்படுகொலையை எதிர்த்து, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர பயந்த கட்சி திமுக! அப்படியான தீர்மானத்தை கொண்டுவந்தது அதிமுக!
4
எல்.லோகநாதன், தூத்துக்குடி,
கே: ‘திமுகவைப்போன்ற பலமான கட்சி, தமிழகத்தில் வேறு ஏதும் இல்லை!’ என்று அடிக்கடி சொல்கின்றனே அக்கட்சியினர்?
ப: தொடர்ந்து இரு சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி அடைந்ததுதான் பலமா? தவிர, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தென் மாவட்டங்களில் அதிமுக தலைவர்கள் போட்டியிட்டு வென்றது உண்டு. ஆனால் கருணாநிதியோ, ஸ்டாலினோ அப்படி போட்டியிட்டிருக்கிறார்களா? பிறகென்ன வெற்று ஜம்பம்?
5
பி.கிருஷ்ணன், கோவை
கே: சட்டம் – நீதி.. இரண்டும் ஒன்றா?
ப: அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு சிறுவனை கொண்டுவந்து நிறுத்தினர் காவல்துறையினர். ஒரு கடையில் இருந்து பிரட் பாக்கெட் ஒன்றை திருடியதாக அச்சிறுவன் மீது குற்றச்சாட்டு.
நீதிபதி, “பணம் கொடுத்து வாங்கியிருக்கலாமே.. ஏன் திருடினாய்?” என்றார். அதற்கு சிறுவன் அழுதபடியே, “எனக்கு அப்பா கிடையாது. அம்மா நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவரைக் கவனித்துக்கொள்வதற்காக எனது வேலையை விட வேண்டியதாயிற்று. இருவருக்கும் பசி. இன்று காலை முதல் பலரிடம் ஏதேனும் வேலை வேண்டும் என கேட்டேன். எவரும் தரவில்லை. வேறு வழியின்றி ஒரு பிரட் பாக்கெட்டை திருடிவிட்டேன்..!” என்றான்.
நீதிபதி, “நீதி மன்றத்திலுள்ள ஒவ்வொருவரும் நான் உள்பட அனைவரிடத்திலிருந்தும் பத்து டாலா் வசூலிக்கப்படவேண்டும். பட்டினியால் திருடிய அந்த குழந்தை மீது மனித நேயமே இன்றி, காவல்துறையில் புகார் அளித்த கடைக்காரர் ஆயிரம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும். இத்தொகை முழுதும் அந்த சிறுவனுக்கு வழங்க வேண்டும்!” என்று தீர்ப்பளித்தார்.
திருடியது குற்றம் என தட்டையாக சொல்வது சட்டம். எதற்காக திருடினான் என்பதை உணர்ந்து தீர்வளிப்பது நீதி.
6
ஹேமநாதன், தஞ்சை
கே: ‘தமிழகத்தில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க, பாமக ஆட்சிக்கு வரவேண்டும்!’ என்கிறாரே ராமதாஸ்!
ப: அட! எப்போதுமே, தனது மகன் அன்புமணிக்கு சீட் கிடைத்தால் போதும் என திருப்தி அடைவார்.. இப்போது அனைத்து மக்களைப் பற்றியும் யோசிக்கிறாரா?
7
ஏ.பழனியப்பன், திருப்பூர்
கே: திடீரென மகாகவி பாரதியாரை தரம் தாழ்ந்து விமர்சிக்க ஆரம்பித்துள்ளனரே உடன்பிறப்புகள்!
ப: “ மகாகவி பாரதி, ஒரு மக்கள் கவிஞன். ‘மக்களுக்காக, மக்களைப் பற்றிப் பாடுவேன்’ என்று ஒரு கவிஞர் கூறினால், அவனை . அவனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவனுடைய கவிதைகள், புரட்சிகரமானவையாக இருந்தால் மக்களின் எதிர்ப்பு இன்னும் வலுவாக இருக்கும். இவ்விதமான சூழலுக்கு இடையிலேதான் சுப்பிரமணிய பாரதி உறுதிகொண்ட நெஞ்சுடன் வீறுநடைபோட்டான். அவன் ஒரு உண்மையான மக்கள் கவிஞன்!” – மக்கள் கவிஞன் என்ற தலைப்பில் பாரதி பற்றி 1948ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி நிலையத்தில் அறிஞர் அண்ணா ஆற்றிய முதல் ஆங்கில உரையின் ஒரு பகுதி இது.
இதெல்லாம் உடன்பிறப்புகளுக்கு எங்கே தெரியப்போகிறது!
8
ம.கதிரவன், மதுரை
கே: ரஜினி, அரசியலுக்கு வருவாரா? கமல், அரசியலில் நிலைப்பாரா?
ப: இரண்டும் நடக்காது. தவிர, ‘அரசியலுக்கு வந்தால், நான் கொலைகாரன் ஆயிடுவேன்!’ என்று பேட்டி கொடுத்தவர் ரஜினி.
‘எல்லாரோயும் சுட்டுக்கொல்லும் எண்ணம் வந்தால், ஒருவேளை நான், அரசியலுக்கு வரலாம்!’ என்றவர் கமல்.
9
ஆர்.சல்மான், மதுரை
கே: எத்தனையோ முயற்சி எடுத்தும் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. மனம் சோர்வாக உள்ளது!
ப: சமீபத்தில் ஒரு புகைப்படம் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை – பேராவூரணி சாலைதான் அது.
கஜா புயலில் கடும் சேதத்தைச் சந்தித்த அந்தப் பகுதியில் கிட்டதட்ட அத்தனை தென்னை மரங்களும் வீழ்ந்தன. ஒட்டுமொத்த பகுதியே, வெற்றுத் தரையாக மாறியது.
இன்று விவசாயிகளின் நம்பிக்கையான கடும் உழைப்பால், அழகழகாய் தென்னைகள் வளர்ந்து நிற்கின்றன.
அந்த விவசாயிகள்… அந்த தென்னை மரங்கள்.. இவற்றை நினைத்துப் பாருங்கள்.. மனச்சோர்வெல்லாம் நீங்கும்!
10
செ.முருகன், பாண்டி
கே: உலகில் பகுத்தறிவான மதம் இஸ்லாம்தான்!’ என தந்தை பெரியார் கூறினாரா?
ப: “ நான் இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ, அதில் எல்லாமே சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அந்த மதத்திலும் பல விரோதமன கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கிறமோ அவை போன்ற சில நடவடிக்கைகள் இஸ்லாம் மதத்திலும் சிலர் செய்கிறார்கள்” (தந்தை பெரியார், சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று பேசியது)
“இவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கிறவர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படி சொல்ல இயலும்? கோபிப்பதில் பயனில்லை. மற்ற மதங்களை விட இஸ்லாம் மதம் மேலானது என்பது என் அபிப்ராயம். ஆனால் அதில் இனிச் சிறிது கூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன் முரண்பட்டவன்” (தந்தை பெரியார், களக்காட்டில் 23.12.1950 அன்று பேசியது)
11
எஸ். சையது அபுதாஹீர், கும்பகோணம்
கே: கொரோனாவைவிட ஆபத்தானது எது?
ப: தி.முக.தான்! அக்கட்சித் தைலவரே, ‘இந்த அரசு கொரோனாவைவிட திமுகவைப் பார்த்துதான் பயப்படுகிறது! என்கிறாரே! ‘நோய்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுமே!’ என நல்ல அரசு பயப்படத்தானே செய்யும்..
12
எம்.ராகவன், தேனி
கே: பல தலைமுறைகளாக தமிழகத்தில் தமிழராகவே வாழ்ந்து, பேச்சு வழக்கில் மட்டும் பிற மொழியை பயன்படுத்துவோரை, தமிழர்களே இல்லை என்று சில, தமிழ் தேசிய அமைப்பினர் சொல்கிறார்களே!
ப: ஆங்கிலேய அரசை எதிர்த்து தீரத்துடன் போரிட்டு வீர மரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் அனைவரும் அறிவோம். தெலுங்கு வம்சாவளியில் வந்து தமிழனாகவே வாழ்ந்து… மறையாமல் நம் மனதில் நிற்கும் அவனை, அடுத்தடுத்த தலைமுறைக்கு அடையாளம் காட்டியவர் ம.பொ.சி.
வீரபாண்டிய கட்டமொம்மனின் வரலாற்றைக் கேள்விப்பட்ட அவர், அது குறித்து ஆராய்ந்து நாடகம் எழுதி வெளியிட்டார். அதுதான் பின்னால் சிவாஜி கணேசன் நடித்த படமாக உருவானது.
தமிழ் தேசிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் ம.பொ.சி., வீரபாண்டிய கட்டபொம்மனை தமிழனாகத்தானே பார்த்தார்!
அந்த பார்வைதான் அறிவு!
13
என். ராகவ்,
கே: ஐ.பி.எல் பார்ப்பது உண்டா?
ப: இதற்கு ஏற்கெனவே, பார்ப்பதில்லை என பதில் சொல்லிவிட்டேன். ஆனாலும், சேனல் மாற்றும்போது, ஐ.பி.எல். வர்ணனைப் பெண்கள் கண்ணில்பட்டால் சிறிது நேரம் பார்ப்பது உண்டு.. ஹி.. ஹி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *