நடிகையைக் கொன்ற டயட்!: எச்சரிக்கை ரிப்போர்ட்!

இன்று, நூற்றுக்கு என்பது சதவிகித இளம் பெண்கள், ‘உடல் எடை குறைந்து, அழகாக தோற்றமளிக்க வேண்டும்!’ என உணவைக் குறைத்து, ‘டயட்’ இருக்கின்றனர். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிவதில்லை.
ஆம்.. இந்த ‘டயட்’ காரணமாக, 27 வயதே ஆன, ஒரு நடிகை பலியாகி இருக்கிறார்.
‘மணிகர்னிகா’ உள்ளிட்ட பல இந்தி படங்களிலும், சில பெங்காலி படங்களிலும் நடித்து பிரபலமானவர், நடிகை மிஷ்டி முகர்ஜி. டி.வி. தொடர், இசை ஆல்பங்கள் என்று பிஸியாக இருந்தவர்.
இவரது உடல் பருமன் அதிகரிக்கவே, ‘கீட்டோ டயட்’ முறையைக் கடைபிடித்தார். இந்த டயட்டின்படி, உணவில் அதிக அளவில் கொழுப்பையும், அதற்கும் கொஞ்சம் குறைவாகப் புரதத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிக மிகக் குறைந்த அளவு மாவுச்சத்து உள்ள பொருட்களை உண்ணவேண்டும்.
இந்த நிலையில்தான், இவரது சிறுநீரகம் மெல்ல மெல்ல செயலிழந்தது. ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் மரணமடைந்தார்.
“மனிதரின் உடலுக்கு புரதம், கொழுப்பு, மாவுச்சத்து ஆகிய மூன்றுமே தேவை. ஆனால ‘கீட்டோ டயட்’ முறையில் மாவுச்சத்து உள்ள பொருட்களை தவிர்க்கச் சொல்கின்றனர். உடல் மெலிதாகும் என்கிற நம்பிக்கையில் இந்த கீட்டோ டயட் முறையைப் பின்பற்றுவர்கள் நாளடைவில் உடலில் மாவுச்சத்து குறைந்து பலவித உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். அதீத டயட் காரணமாக உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழப்பதும் நடக்கும். அப்படித்தான் நடிகை மிஷ்டி முகர்ஜியின் சிறுநீரகம் செயல் இழந்து, இறுதியில் மரணம் நேர்ந்துவிட்டது!” என்கிறார்கள் மருத்துவர்கள்.
சமூக ஆர்வலர்களும் இது குறித்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள், “அறிவியலையோ மருத்துவத்தையோ அறியாத பலரும், இன்றைய இணைய உலகில் மருத்துவர்களாக தங்களை வெளிக்காட்டிக் கொள்கின்றனர். முகநூல், யு டியுப் போன்ற சமூகவலைதளங்களில் தங்களது மனதில் தோன்றியதையெல்லாம் பேசுகிறார்கள். அவற்றை எல்லாம், மருத்துவ முறையாகவும் சொல்லிக்கொள்கிறார்கள்.
இதை நம்பும் பலர் அந்த தவறான வழிகலைப் பின்பற்றி, தங்களது உடல் நலனை இழக்கிறார்கள். நடிகை மிஷ்டி முகர்ஜி போல உயிரை இழந்தவர்களும் ஏராளம் இருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரலமானவர்களாக இல்லாததால், அந்தத் தகவல் வெளியில் வராமல் போயிருக்கக்கூடும்.
இனியேனும் தகுதியற்ற நபர்கள் தங்களை மருத்துவர்கள் போல் பேசினால், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *