“உறுப்பினர் சேர்க்கை மோசடி!”: ஓப்பனாய் உடைத்த மா.செ.!

திருவள்ளூர் மாவட்டம் சின்ன மாங்கோடு கிராமத்தில், “அனைவருக்கும் ஐந்து கிலோ அரிசி இலவசம்!” என்று தி.மு.க.வினர் அறிவித்தனர். கூடிய மக்களிடம் சந்தடி சாக்கில் விபரங்களை கேட்டு, இணையம் மூலம் உறுப்பினராக சேர்த்துவிட்டனர்.
ஆனாலும் சுதாரித்த பலர், “அரிசி தர்றேன்னு சொன்னதால வந்தோம்..” என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டனர்.
இணையவழி சேர்ப்பு இப்படி என்றால், பழைய முறையிலும் மோசடி நடந்தது என்பதை வேணுவே தனது பேச்சில் வெளிப்படுத்தினார்.
அவர், “, முன்பெல்லாம் திமுகவில் 25 உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு வலது கை இடது கையில் 25 பேரின் கையெழுத்தை நானே போட்டு உறுப்பினர் அடையாள அட்டை கூட வழங்காமல் இருந்திருக்கிறேன்!” என்றார்.
அங்கிருந்த உடன்பிறப்புகள், “நகைச்சுயா பேசுறேன்னு உண்மையை உடைக்கிறாரே, இந்த மனுசன்!” என்று அலுத்துக்கொண்டனர்.
2
உதயநிதி போட்ட கண்டிசன்!
சில நாட்களுக்கு முன், தி.மு.க., சார்பில், சென்னை மாதவரம், திருவொற்றியூர் ஆகிய பகுதியில குளம் துார் வாருதல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அக்கட்சியின் இளைஞர் அணி செயலர், உதயநிதி கலந்துகொண்டார்.
“கிராண்டா விளம்பரம் செய்யணும்!” என உதயநிதி உத்தரவிட, போஸ்டர்கள், பிளக்ஸ், பேனர்கள் என தூள் பறந்தது. “5இதற்கான செலவு மட்டுமே 18 லட்ச ரூபாய்!’ என்கின்றனர் லோக்கல் உடன் பிறப்புகள்.
ஆனால், நலத்திட்டத்தின் மொத்த மதிப்பே, ஒரு லட்ச ரூபாய்தான்!
இதைத்தான், ‘சுண்டைக்காய் கால் பணம்… சுமைக்கூலி முக்கால் பணம்’ என்பார்களோ?
3
கறார் வசூல் செல்வ.கணபதி!
“மாவட்ட பொறுப்புகள் வழங்குவதற்கு, பணம் வசூலிக்கிறார்!” என்று, சேலம் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வ.கணபதி மீது, உடன்பிறப்புகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மேலும், “இவரது அடாவடிகளை தாங்க முடியாமல் பலரும் கட்சியைவிட்டு வெளியேறி வேறு கட்சிகளில் ஐக்கியமாகி வருகிறார்கள்!” என்கிறார்கள்.
இதற்கு ஒருதுளி உதாரணம் தவசிராஜா. , மேட்டூருக்கு அருகில் உள்ள கொளத்தூர் ஒன்றிய தி.மு.க.வின் முன்னாள் பொறுப்பாளர்.
இவர், “எல்லா ஒன்றியங்களிலும் பணத்தை எதிர்பார்ப்பதுபோல என்னடமும் செல்வகணபதி பணம் எதிர்பார்த்தார். நான் முடியாது என்றேன்.. உடனே உன்னை என்ன செய்கிறேன் பார் என மிரட்டினார். மேலும் எனது பதவியையும் பறித்துவிட்டார். தொண்டனுக்கு மரியாதை இல்லாத தி.மு.க.வில் இனியும் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து பாஜகவில் சேர்ந்துவிட்டேன்!” என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *