“தொண்டர்களைக் கொன்றவர்களுக்கு பதவியா?”: தி.மு.க.வினர் ஆவேசம்

2019 ஜூலை 22ம் தேதி…
இருட்டிக்கொண்டிருக்கும் மாலை நேரம்…
தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த, 64 வயது கருணாகரன், தனது தோட்டத்துக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பிக்கொண்டு இருக்கிறார்..
வழியில் திடுமென இரு சக்கர வாகனம் ஒன்று குறுக்கிடவே, அதிர்ந்துபோய் தனது காரை நிறுத்துகிறார்…
காரில் இருந்து இறங்கிய இருவர் அரிவாள், கத்தியுடன் கருணாகரனை நெருங்குகின்றனர்..
அதிர்ச்சி அடைந்த கருணாகரன், சூழலைப் புரிந்துகொண்டு மீண்டும் காரை இயக்க முற்படுகிறார்.. அதற்குள் இன்னொரு இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கியவர்களும் சேர்ந்து, கருணாகரனை கூறு கூறாக்குகிறார்கள்…
உடல் முழுதும் ரத்தச்சகதியாக, அதே இடத்தில் துடிதுடித்து மரணிக்கிறார் கருணாகரன்.
இவர் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தவர்.
அவரைக் கொன்றது, அதே கட்சியைச் சேர்ந்த தூத்துக்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்த சுரேஷ் தலைமையிலான கொலைகார கும்பல்தான்.
காவல்துறை விசாரணையில் சுரேஷ், “நான் வகித்துவந்த கட்சிப் பதவியை மேலிடத்தில் போட்டுக்கொடுத்து பறித்துவிட்டார் கருணாகரன். அந்த இடத்துக்கு பாலமுருகன் என்பவரை கொண்டுவந்துவிட்டார். அதனால்தான் அவரை கொன்றேன்!” என்று வாக்குமூலம் கொடுத்தார் சுரேஷ்.
தூத்துக்குடி மாவட்ட உடன்பிறப்புகள், “கட்சிக்காக பல வருடங்கள் உழைத்த கருணாகரனை, எங்கள் கட்சியைச் சேர்ந்த சுரேஷே கொன்று விட்டாரே என்று கடும் மன உளைச்சல் ஏற்பட்டது. அப்போதைக்கு அவரை கட்சியில் இருந்து நீக்கினார்கள். ஆனால், பிறகு மீண்டும் சேர்த்துவிட்டார்கள்.
அது மட்டுமல்ல, அந்த கொலைகார சுரேஷூக்கு தற்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பதவி கொடுத்திருக்கிறது தலைமை!” என்று கொதிக்கிறார்கள்.
மேலும் அவர்கள், “இதே போல இன்னொரு நியமனமும் எங்களை ஆத்திரத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது… திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்தவர், ‘பில்லா’ ஜெகன். தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்த தொழிலதிபர்.
தனது மகளை காதலித்த இளைஞர் சச்சின் என்பவரை கடந்த 2017ல் சச்சின் என்ற இளைஞரை நடு ரோட்டில் வைத்து துள்ளத் துடிக்க கொன்றார்.
தவிர தனது சொந்தத் தம்பியையே, சொத்துக்காக, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இவை தவிர மேலும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளும் இவர் மீது உண்டு.
இதனால் இவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது தலைமை. ஆனால் இவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.
அது மட்டுமல்ல சமீபத்தில் இவருக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் பதவி அளிக்கப்ட்டிருக்கிறது!
இப்படி கொலைகாரர்கள்.. அதுவும் சொந்த கட்சியினரையே கொல்பவர்களுக்கு பொறுப்புகளைக் கொடுககிறர்கள். இது குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தியும் பலனில்லை. இப்படி நடந்தால், நாங்கள் எந்த நம்பிக்கையில் தி.மு.க.வில் இருப்பது?” வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார்கள் தூத்துக்குடி மாவட்ட உன்பிறப்புகள்.
மேலும், “இந்த கொடூர கொலைகாரர்களுக்கு கட்சி பதவி கிடைக்கக் காரணம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அனிதா ராமகிருஷ்ணன்தான்!” என்றும் குமுறினர்.
இது குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் கருத்தை அறிய அவரை தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவர் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தார்.
“தி.மு.க. ஒரு குடும்பம்’ என்றார் அண்ணா. ஆனால் அந்த கட்சி, தனி நபர் குடும்பத்துக்கு முழுமையாக சென்றதன் விளைவே, சக உடன்பிறப்புகளையே கொலை செய்யும் நிலைக்குத் தள்ளிவிட்டது!” என்று புலம்புகிறார்கள் சீனியர் உடன் பிறப்புகள்.
பாக்ஸ்:
ஸ்லக்: “ரோட்ல வுட்டு கிழிச்சிருவேன்!”: உடன்பிறப்பை மிரட்டும் உடன்பிறப்பு
தூக்குக்குடி விவகாரம் போலவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நடந்திருக்கிறது.
இது குறித்து கூறும், கள்ளக்குறிச்சி உடன் பிறப்புகள், “ சங்கராபுரத்தை சேர்ந்த தி.மு.க நகர அவைத்தலைவராக இருக்கும் எம்.எஸ் குமார், ரவுடித்தனத்துக்கு பெயர் போனவர். தி.மு.க. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினராக இருப்பவர் நாகராஜன்.
தனக்கு எதிராக நாகராஜன் செயல்படுவதாக நினைத்த குமார், நாகராஜுக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த மிரட்டல் ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.
அந்த உரையாடல்..
“எப்பா நாகராஜ்.. நான் குமார் பேசுறேன்ப்பா! என்னமோ எம்.எல்.ஏ ஆபீஸ்ல என்னைய பத்தி தப்பா பேசுனியாமே? ரோட்ல உட்டு கிழிச்சுறுவேன் பாத்துக்கோ! நான் வேற மாதிரி என்கிட்ட வச்சுக்காத!”
”அண்ணே! நான் ஏதுவுமே பேசலைண்ணே”
”ஏய்.. உன் வேலையெல்லாம் வேற எவன்கிட்டயாவத் வச்சுக்கோ! உன் ஊர்ல எனக்கு சொந்தம் நிறைய இருக்குது. அதனால பார்த்து இருந்துக்கோ, சொறுகிடுவேன்! எவனும் கேட்க மாட்டான்!”
“அண்ணே…!”
“கேளுடா.. உன்னை ரோட்ல உட்டு உதைப்பேன், அநாதை பொணமாக தான் நீ போகணும்ம், நடு ரோட்ல வெட்டுவேன்..”
– இந்த விவகாரம் கள்ளக்குறிச்சி உடன் பிறப்புகளை ரொம்பவே பாதித்திருக்கிறது.
அவர்கள், “வெளிப்படையாகவே, சக கட்சிக்காரருக்கு கொலை மிரட்டல் விடுகிறார் குமார். ஆனால் அவருக்கு ஆதவராகவே மேலிடம் இருக்கிறது. இப்படி நடந்தால், கள்ளக்குறிச்சியில் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழகத்திலும் கட்சி காணாமல் போகும்!” என்கிறார்கள் வேதனையுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *