தி.மு.க. கிளைச்செயலாளர் பதவிக்கு ஒரு கோடி ரூபாய்!

தமிழகம் முழுதுமே, தி.மு.க. கட்சிப் பதவிகளுக்கு பேரம் நடக்கிறது, லட்சக்கணக்கில் பணம் புரளுகிறது என்ற தகவல்கள் வெளியானபடியே இருக்கின்றன.
“தற்போது இந்த பேரம், ஒரு கோடி ரூபாய் அவளவுக்கு உயர்ந்துவிட்டது!” என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.
இந்த விவகாரம் தற்போது வெளிப்படையாகவே வெடித்திருக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் திமுகவின் கிளைச் செயலாளர் பதவிக்கு ஒரு கோடி ரூபாய் ஏலம் போவதாக, அக்கட்சியின் பாதிக்கப்பட்ட தொண்டர்கள் போஸ்டர் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் ஒரு சுவரொட்டி ஒன்றுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல வாசகங்கள் இருக்கின்றன.
அந்த போஸ்டரில் இருக்கும் வாசகங்கள்:
‘கழகத் தளபதி அவர்களுக்கு ஒரு கோரிக்கை..
கழகத்தின் கிளைச் செயலாளர் பொறுப்புக்கு ஒரு கோடி இருந்தாதான் வரமுடியும் என்று ஒன்றிய செயலாளர் சொல்வது உண்மையா?
கிளைச் செயலாளர் பதவிகளை பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் விலைபேசி விற்கும் நிலை தலைமைக்கு தெரியுமா?
தெற்கு ஒன்றியத்தில் 32 கிளைகளை பதிவு செய்யாமலும், பல கிளை செயலாளர்களை பதவிகளை எடுத்தும், கட்சி நடத்தும் ஒன்றிய செயலாளருக்கு ஆதரவாக இருப்பது திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் ஒன்றிய செயலாளர் மீது தலைமைக்குப் புகார் அனுப்பியும், அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இவரின் செயல்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியுமா கட்சிக்காரர்கள் இடத்தில் அவப்பெயர் எடுத்து, தன்னிச்சையாக செயல்படும் அவரை மாற்றி புதியவரை பொறுப்புக்கு அறிவிக்க வேண்டுகிறோம்!
– இப்படிக்கு,
பாதிக்கப்பட்ட / பாவப்பட்ட கழகத் தொண்டர்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து பூதலூர் பகுதி உடன்பிறப்புகளிடம் பேசினோம். அவர்கள், “இ கட்சிப் பதவி வேண்டும் என்றால், அதற்கேற்ற தொகையை மேலிடத்துக்கு அழ வேண்டியிருக்கிறது. குறிப்பாக திமுக கிளைச் செயலர் பதவிக்கு ஒரு கோடி ரூபாய் தந்தால்தான் வர முடியும் என்கிறா, பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் முருகானந்தம்.
கேட்டால், ‘தேர்தல் வியூகம் வகுப்பதற்கே பிரசாந்த் பூசனுக்கு கட்சி, பல கோடி ரூபாய் கொடுக்கிறது. பணம் இல்லாவிட்டால் கட்சிக்கு வந்து என்ன செய்யப்போகிறாய்?’ என்கிறார்!” என ஆதங்கப்படுகிறார்கள்.
இது குறித்து முருகானந்ததத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இதெல்லாம் உட்கட்சி எதிரிகளின் சதி!” என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
பொதுமக்கள், “எதிர்க்கட்சியாக இருக்கும்போதே, கட்சிப் பதவிக்கு கோடிக்கணக்கில் வசூலிக்கிறார்கள். ஒருவேளை இவர்கள் ஆட்சிக்கு வந்தால்…?” என கேள்வி எழுப்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *