ரூ.80 லட்ச மதிப்பு நிலம் அபேஸ்! இருவர் கைது!

சென்னை மடிப்பாக்கம் ராம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமார். இவர், தனக்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்புள்ள இடத்தை, தனக்கே தெரியாமல் யாரோ விற்றுவிட்டனர் என்று பதறிபபோய காவல்துரையில் புகார் அளித்தார்.
காவல்துறையினரின் விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரைச் சோ்ந்த சரவணகுமார், துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த பிரித்திவிராஜ் ஆகியோர், போலி ஆவணங்களை உருவாக்கி, ஆள் மாறாட்டம் செய்து, அந்த இடத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சரவணகுமாரையும், பிரித்திவிராஜூம் கைது செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல்வேறு இடங்களை இவர்கள் மோசடி செய்ததும் தெரியவந்திருக்கிறது.
மோசடி இரட்டையர்களில் ஒருவரான பிரிதிவிராஜ் திமுக இளைஞரணி நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
2
சேமியா பாக்கெட்டில் போதைப் பொருள் கடத்தல்!
தமிழக – கேரள எல்லைப்பகுதியான களியக்காவிலையில் அன்வர் என்பவர், தனது வீட்டில், தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருட்களை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அன்வர் வீட்டில் நடத்திய சோதனையில், சேமியா பாக்கெட்டுக்களுக்கு இடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, பெரும் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அன்வருக்கு உதவியாக இருந்து, தலைமறைவாகிவிட்ட மூவரை தேடி வருகின்றனர். அவர்கள், களியக்காவிளை திமுக பேரூர் செயலாளர் தோமஸ் குமார், திமுக மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஷாஜகான் மற்றும் சையது அலி ஆகியோர்தான்!
3
ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற தி.மு.க. புள்ளி!
சென்னை நங்கநல்லூர் பகுதியில், தில்லை கங்காநகர் சுரங்கபாதை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இரவு நேரத்தில் இருவர், மது அருந்தி கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த, ஆதம்பாக்கம் உதவி ஆய்வாளர் மோகன்தாஸை வழிமறித்து, பாட்டிலால் மண்டையில் அடித்து கொலை செய்ய முயன்றனர். பிறகு தப்பியோடிவிட்டனர்.
விசாரணையில், அவர்களில் ஒருவர், ஆலந்தூர் தி.மு.க 162 வட்ட இளைஞரணி தி.மு.க துணை அமைப்பாளர் வினோத். மற்றவர், அவரது நண்பர் அஜித்குமார்.
இப்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4
சிறுமி பலாத்காரம்! வி.சி.க. பிரமுகர் கைது!
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளையன் என்பவர் வி.சி.க.கவின் ஒன்றிய பொறுப்பாளராக இருககிறார். இவர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஆறாம் வகுப்பு மாணவியான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயல.. அந்த சிறுமி அலற… வெள்ளையன் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வெள்ளையனை தேடிவந்தனர். இந்நிலையில், காவல்துறையினரிடம் சரணடைந்தார் வெள்ளையன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *