மத மாதற்றத்துக்காக குழந்தைகள் கடத்தல்!

‘பாலியல் தொழிலுக்காக, பிச்சை எடுக்கவைக்க, என குழந்தைகள் கடத்தப்படும் நிலையில், மதத்தைப் பரப்பவும் குழந்தைகள் கடத்தப்படுவது ஆரம்பித்திருக்கிறது!” என்று பதறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இதை உறுதிப்படுத்துவது போல, களியக்காவிலை பகுதியில், ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தமிழக – கேரள எல்லைப்பகுதியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது, இங்கு கடந்த வாரம், இரவு, 11.00 மணிக்கு, ஐந்து வயது சிறுமி மற்றும் எட்டு வயது சிறுவனோடு ஒரு தம்பதி நின்றனர்.
சிறுமி அழுதபடியே இருந்ததால், அப்பகுதியில் ரோந்து போலீசார் தம்பதியிடம் விசாரித்தனர்.
அந்த நபர், திருவனந்தபுரம் வெள்ளையம்பலத்தை சேர்ந்த ஜோசப் ஜான் என்பதும் அந்தப் பெண்மணி, பெயர் எஸ்தர் என்பதும் தெரியவந்தது.
தான், பெந்தகோஸ்தே என்ற தீவிர கிறிஸ்துவ சபை உறுப்பினர் என்று தெரிவித்த ஜான், அந்த இருவரும் தனது குழந்தைகள் என்றார்.
தொடர் விசாரணையில் உண்மை தெரிந்தது..
அந்த சிறுமிஅந்த சிறுமியின் பெயர் லோகிதா; அவளது பெற்றோர் சத்யமூர்த்தி – லோகிதா தம்பதி. பெங்களூருவில் வசிக்கிறார்கள். சில நாட்களுக்கு முன், தாயுடன் லோகிதா, கடைத்தெரு வந்திருக்கறாள். .
அப்போது லோகிதாவிடம் நைச்சியமாக பேசி கடத்தி வந்துவிட்டது ஜோசப் – எஸ்தர் தம்பதி.
‘அந்த சிறுவன், ஜோசப்பின் முதல் மனைவியின் மகனாம். அதுவும் உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை.. விசாரிக்க வேண்டும்’ என்கின்றனர் போலீசார்.
இதற்கிடையே லோகிதாவின் தாய் பெங்களூருவில் தன் குழந்தை மாயமானதாகவும் மீட்டுத் தரும்படியும் கோரிக்கை விடுக்கும் வீடியோ, களியக்காவிளை போலீசார் கவனத்திற்கு வந்தது. லோகிதாவின் பெற்றோர் சத்தியமூர்த்தி – கார்த்திகேஸ்வரி தம்பதிக்கு தகவல் தெரிவித்த போலீசார் அவர்களை களியாக்காவிளை வரவழைத்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவித்த காவல்துறையினர், “மிகத் திட்டமிட்டு இந்தக் கடத்தலை செய்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட சிறுமியின் பெயரில் ஏற்கெனவே, போலி ஆதார் அட்டையையும் தயார் செய்து வைத்திருந்தனர்!” என்கின்றார்கள்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள், “இந்தியாவில் ஆண்டுதோறும் 40,000 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குறிப்பிட்ட சம்பவத்தைப் பார்க்கும்போது, மதம் மாற்றி தத்து கொடுக்கவே திட்டமிட்டுள்ளார்கள் என்பது தெரிகிறது. எப்படியாக இருந்தாலும் குழந்தைகளைக் கடத்துவது மன்னிக்க முடியாத குற்றம். அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்!” என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *