ரஜினி – கமல் கூட்டணி முறிவு!

ரஜினி ஹீரோவாக நடிக்க, கமலின், ‘ராஜ்கமல்’ நிறுவன தயாரிப்பில் லோகேஷ் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக பரபரப்பாக தகவல் பரவியது.
இப்போது அத்திட்டம் கைவிடப்பட்டதாக ஒரு நியூஸ் உலா வருகிறது.
இது குறித்து கூறுவோர், “பிரபல தொலைக்காட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர், இந்த படத்துக்காக பைனான்சியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்தார்.
இது குறித்த தகவல் அறிந்த ரஜினி, டென்ஷன் ஆகிவிட்டார். ‘கமல் தயாரிக்கும் படத்தில்தான் நடிப்பதாக ஒப்புக்கொண்டேன். அவரது பெயரைப் பயன்படுத்தி வேறு யாரோ தயாரிக்கும் படத்தில் நடிக்க மாட்டேன்’ என இயக்குனர் லோகேஷை அழைத்து கூறிவிட்டார்.
கமல் தரப்பு, ‘நிர்வாக வசதிக்காகத்தான், அந்த தொலைக்காட்சி நபர் மூலம் தயாரிக்க முடிவு செய்தார் கமல். இதை ரஜினி தவறாக புரிந்துகொண்டுவிட்டார். இது குறித்து தன்னை தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாமே என்ற வருத்தத்தில் இருக்கிறார் கமல். ஆகவே அதே கதையில் சில மாற்றங்களை செய்து கமல் நடிக்க இருக்கிறார்!” என்கிறார்கள்.
ஒரு சினிமா கூட்டணி சிதைந்துவிட்டது!
2
ஸ்லக்: இப்படி மாறிட்டாரே சிம்பு!
பொதுவாகவே சிம்புவுக்கு, ‘படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வரமாட்டார். அவரை புக் செய்தால், படம் எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியாது!’ என்ற விமர்சனம் உண்டு. சிம்புவின் இந்த பழக்கத்தால், இடையில் நின்ற படங்களும் பஞ்சாயத்துக்களும் ஏராளம்!
இந்த நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் முப்பதே நாட்களில் ஒரு படத்தை நடிக்க இருக்கிறார் சிம்பு என தகவல் பரவியுள்ளது. ‘இசை – யுவன், ஹீரோயின் – கீர்த்தி சுரேஷ்’ என்கிறார்கள் கோலிவுட்டில். .
மேலும், ‘சிம்பு மாறிட்டாராம்!’ என சொல்கிறார்கள். ‘யார் சொன்னது?’ என்று கேட்டால், ‘அவரே சொன்னார்!’ என்கிறார்கள்.
அது சரி!
3
ஸ்லக்: இப்படியும் ஒரு விளம்பர ஸ்டண்ட்?!
விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் அடுத்த சீஸன் துவங்கும் நிலையில், நடிகை லட்சுமி மேனனும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாக ஒரு தகவல் உலவியது.
உடனே லட்சுமி மேனன், “வெட்டித்தனமாவர்கள் பார்ப்பதற்காக, பாத்திரம் விளக்க, பாத்ரூம் கழுவ நான் தயாராக இல்லை!” என்று காட்டமாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், “பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமி மேனனும் கலந்துகொள்ள இருக்கிறார். நிகழ்ச்சி குறித்த விளம்பரத்துக்காக இப்படி பரபரப்பாக பேச வைத்திருக்கிறார்கள்!” என்று புது குண்டை போடுகிறார்கள் டிவி வட்டாரத்தில்.
வித்தியாசமாத்தான் யோசிக்கிறாங்கப்பா!
4
ஸ்லக்: அதிரவைத்த மாளவிகா லாஜிக்!
விஜய் ஜோடியாக, ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன், “பட வெளியீடு தள்ளிப்போவது வருத்தமாக இருக்கிறது! இதைப் போக்க மீண்டும் விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் போல் இருக்கிறது!” என்று கூறியிருந்தார்.
இதை நம்பி விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். சம்பளத்தை டபுளாகச் சொல்லி அதிரவைத்திருக்கிறார் மாளவிகா.
கேட்டதற்கு, “விஜய் அப்படிங்கிற மாஸ் ஹீரோவோட ஜோடியா நடிச்சுட்டேன். அப்படின்னா என் மார்க்கெட் லெவல் ஏறத்தானே செய்யும்!” என்கிறாராம் புன்னகையுடன்.
லாஜிக் சரியாத்தான் இருக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *