மக்கள் மனதில் கோலோச்சும் இ.பி.எஸ்.!

@ தமிழக முதல்வர் இ.பி.எஸ். அவர்களுக்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கிறது என்கிற சர்வே, குறித்த கட்டுரை சிறப்பு. அவரது நிர்வாகத் திறமை, எளிமை ஆகியவையே மக்களிடம் பேரதரவு கிடைக்க முக்கிய காரணம். நிச்சயமாக அவர்தான் மீண்டும் தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்கப்போகிறார். அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!
– ஆ.மாதவன், கோவை
@ அடுத்த முதல்வர் மட்டுமல்ல.. அடுத்தடுத்த தேர்தல்களிலும் இ.பி.எஸ்.தான் தமிழக முதல்வர். அவரது நீண்டகால அரசியல் மற்றும் நிர்வாக உழைப்பை மிகச் சிறப்பாக மக்களுக்கு அளிக்கிறார். அதனால்தான் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களிலும் கோலோச்சுகிறார். இதை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்திய, ‘தண்டோரா வாய்ஸ்’ இதழுக்கு நன்றிகள்.
– ம.முருகன், தூத்துக்குடி,
@ மு.க.ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா, உள்ளிட்ட தி.மு.க. கும்பல், தாங்கள் 2ஜி ஊழலில் அள்ளிய பணத்தை வெளிநாட்டில் பதுக்கி இருப்பதையும், அது குறித்த தகவல் வெளியாகி இருப்பதையும், ‘தண்டோரா வாய்ஸ்’ இதழ் மட்டுமே உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டது. தண்டோராவுக்கு பாராட்டுக்கள்.
மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, இன்று திமிராகத் திரியும் தி.முக. கும்பல் உரிய தண்டனை பெற வேண்டும். அவர்கள் கொள்ளையடித்த பணம் அனைத்தும் அரசு கஜானாவில் சேர வேண்டும்!
– வே. மணிமாறனன், சென்னை
@ இணையம் உறுப்பினர்களைச் சேர்ப்பதாக சொல்லும் தி.மு.க. மோசடி பற்றி, ‘முட்டாள் அரசன்’ கதை மூலம் அருமையாக எடுத்துச் சொன்னார் பாணக்யன்.
அதே போல, ஜோதிட நம்பிக்கை குறித்த கேள்விக்கும், பெண் சுதந்திரம் பற்றிய வினாவுக்கும் அவரது பதில்கள், ‘நச், நச்’.
தொடரட்டும், பாணக்யனாரின் பரபர பதில்கள்!
– வெ.ஜீவசகாப்தன், மதுரை
@ சிவப்பு பாதரச மோசடி குறித்த விரிவான கட்டுரையைப் படித்தேன். இப்படியும் ஏமாற்றுவார்களா என்பது போய், இப்படியும் ஏமாறுகிறார்களே என்றுதான் தோன்றியது. சிலரது அதீத பண ஆசைதான், இந்த மோசடிக்குக் காரணம்.
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான் என்பது உண்மை.
– ஆர்.மணி, கோவில்பட்டி
@ ‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை மிரட்டித்தான், பொதுச் செயலாளர் பதவியை வாங்கினார் துரைமுருகன்!’ என்பதை முதன் முதலில் சொன்னது நீர்தான். அதை மேலும் உறுதிப்படுத்துவதைப்போல, துரைமுருகன் + கதிர் ஆனந்த்தை போட்டுக்கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.
பேராசை பெரு நஷ்டம் என்பார்கள். மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஆசை அதைவிட கொடிது. அதற்கான தண்டனையை தி.மு.க. பிரமுகர்கள் அடைந்தே தீருவார்கள்!
– செ.ராஜநாயகம், தேனி
@ இணையம் மூலம் உறுப்பினர் சேர்ப்பு என்கிர மோசடியே தி.மு.க.வைக் காட்டிக்கொடுத்துவிட்டது. தவிர, யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணின் படத்தைப் பயன்படுத்தி, வீட்டைவிட்டு ஓடிவிட்டதாய் விளம்பரம் கொடுப்பதெல்லாம் என்னவொரு கொடூர மனநிலை! இதெல்லாம் கருணாநிதி குடும்பத்துக்கே கைவந்த கலை!
– ஜெ.ராதாகிருஷ்ணன், திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *