சொல்றதுக்கு ஒண்ணுமில்லே

உ.பி.யில் அநியாயமாகக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி!” என அறிவித்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த பேரணி தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் நடந்தது. பேரணியில் கலந்துகொண்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சில செய்திகள் நமக்கு நினைவுக்கு வந்தன.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பாக தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட, தமிழச்சி தங்கபாண்டியனை, பிரச்சார கூட்டத்தில் வைத்தே “அழகி!” என வர்ணித்தார் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி.
சில நாட்களுக்கு முன் தமிழச்சியின் தாயார் ராசாமணி மறைவுக்கு அஞ்சலி என, “தான் பெற்ற பிள்ளைகளைக்கூட தென்னரசை கருப்பாகவும், தமிழச்சியை சிவப்பாகவும் பெற்றெடுத்த அண்ணன் தங்கபாண்டியனின் துணைவியார் திருமதி ராசாமணி அவர்களது மறைவுக்கு அஞ்சலி” என பதிவிட்டார் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் லியோனி.
பெண்கள் மீது தி.மு.க. நிர்வாகிகள் எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக சில செய்திகள் கீழே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *