தலைவர் முதல் தொண்டர்வரை.. தி.மு.க. அராஜகங்கள்..!

இதோ… தி.மு.க.வினரின் தாக்குதல் பட்டியலில், இன்னொரு பிரியாணி கடைக்காரர் இடம் பிடித்துவிட்டார்!
சென்னை சென்னீர் குப்பம் பகுதியில் இருக்கும் உணவகத்தில், பிரியாணி வாங்கிய தி.மு.க. தொண்டர் கார்த்தி, அதில் எலும்பு இல்லை என்று ஆத்திரமடைந்தூ ஊழியர்களை தாக்கியுள்ளார்.
தி.மு.க.வினரின் இந்த தாக்குதல் படலம் கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளது.
இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான்.
2015ம் ஆண்டு சென்னையில், கோயம்பேடு-ஆலந்தூர் இடையே முதாலவது, மெட்ரோ ரயில் சேவை துவங்கியது. இதையடுத்து அந்த ரயிலில் பயணம் செய்ய விரும்பினார் ஸ்டாலின். தனது படைகள் புடை சூழ, ரயிலில் பயணித்தார்.
மீடியாக்கள் குவிந்தன. சில டிவி சேனல்கள் அவர் பயணத்தை லைவ் காண்பித்தன. மெட்ரோ ரயிலில் நின்று கொண்டே பயணித்த ஸ்டாலினுக்கு, உட்கார்ந்திருந்த பயணிகள் பலரும் சீட் கொடுக்க முன்வந்தும் ஸ்டாலின் மறுத்தார்.
அப்போது, ஸ்டாலின் அருகே நின்ற ஒரு வாலிபரை ஸ்டாலினுடன் வந்த திமுகவினர் தள்ளிப்போகுமாறு கூறினர். அவர் சற்று தயங்கியபோது, ஸ்டாலின் அந்த வாலிபரின் கன்னத்தில் தனது கையால் ஒங்கி அறைந்து, ‘தள்ளிப்போ!’ என விரட்டினார்.
இந்த காட்சி வீடியோக்களில் பதவாக.. சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
‘அவரும் தி.மு.க. தொண்டர்தான்!’ என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் சமாளித்தனர். ஆனால், ‘கட்சிக்காரர் என்பதற்காக அடிப்பதா… தள்ளி நில்லுங்கள் என்று சொல்லலாம். அதைவிடுத்து, தனது பணத்தை செலவு செய்து டிக்கெட் எடுத்து பொது வாகனத்தில் பயணிப்பவரை அடிப்பது அராஜகம்!’ என்று அனைத்துத் தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
தி.மு.க.வினரின் மேலும் சில அராஜகங்களை பார்ப்போம்..
இது 2018 ஜூலை 28 அன்று நடந்த சம்பவம்..
சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்கள், சகோதரர்களான தமிழ்ச்செல்வன். மற்றும் பிரகாஷ்.
சம்பவத்தன்று இரவு உணவுகள் தீர்ந்த பிறகு, கடையின் முன்பக்கத்தில் உள்ள ஒரு ‘ஷட்டரை’ மூடிவிட்டு கணக்கு பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது விருகம்பாக்கம் தி.மு.க. நிர்வாகி பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த பத்துக்கும் மேற்பட்டோர் கடைக்குள் சென்று பிரகாசிடம் பிரியாணி கேட்டனர்.
அவரோ, “உணவுகள் தீர்ந்துவிட்டன” என்று கூறினார்.
அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் “நான் தி.மு.க.காரன்.. எனக்கே பிரியாணி இல்லேன்னு சொல்றியா?” என்று கேட்டு அங்கு இருந்த பொருட்களை கைகளால் தள்ளிவிட்டார்.
அப்போது கடை ஊழியர்கள் இருவர், “ஏன் வீணாக பிரச்சினை செய்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் தனது கூட்டாளிகளுடந் சேர்ந்து கடையை சூறையாடினார். தனக்கே உரிய ‘பாக்சிங்’ பாணியில் பிரகாஷின் முகத்தில் ஓங்கி குத்துவிட்டார்.
இதில் பிரகாசின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டது. இத்தாக்குதலை தடுக்க வந்த ஊழியர்களையும் யுவராஜின் கூட்டாளிகள் விட்டுவைக்கவில்லை.
ஊழியர்களில் ஒருவரை கடைக்கு வெளியே இழுத்து சென்றும், மற்றொரு ஊழியரை கடைக்குள்ளும் வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பிறகு சாவகாசமாக, அங்கிருந்து வெளியேறி கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு சென்றுவிட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம், கடையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் (சி.சி.டி.வி.) அப்படியே பதிவாகிவிட்டது.
யுவராஜ் கும்பலின் தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரகாஷ், கருணாநிதி, நாகராஜ் ஆகிய மூவரும் பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பிறகு, இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பாக்சர் யுவராஜ், திவாகரன் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது குறித்து, “திமுக பிரமுகரான பாக்சர் யுவராஜ் , தனது கட்சி நிகழ்ச்சிகளுக்கு என்று அப்பகுதியில் அடாவடியாக வசூல் செய்வார்.. ஓசியில் பொருட்கள் வாங்குவார்…!” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் முக. ஸ்டாலின் ஒரு எச்சரிக்கை விடுத்தார்.
அதில், “விருகம்பாக்கத்தில் உள்ள கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தி.மு.க. கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டு உள்ளார்கள். தி.மு.க. நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்” என்றார்.
ஆனால், அதன் பிறகும், தி.மு.க. தொண்டர்கள், அப்பாவி மக்களை தாக்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேற்கண்ட சம்பவம் நடந்த ஓரிரு மாதங்களிலேயே அதாவது, 2018 செப்டம்பர் மாதத்திலேயே அடுத்த தாக்குதல் குறித்த புகார் வெளியானது.
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் வசித்து வருபவர் சத்யா. இவர் தனது வீட்டின் மாடியில் மயூரி என்ற பெயரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
வேப்பந்தட்டையில் வசித்துவருபவர் தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார். இவர்கள் இருவருக்கும் ஐந்து வருடங்களாகக் கொடுக்கல் வாங்கல் பழக்கம் இருந்துவந்துள்ளது.
இந்த நிலையில், தனது பியூட்டி பார்லரை விரிவுபடுத்துவதற்காக சத்யா, செல்வகுமாரிடமிருந்து 25 லட்சம் ரூபாய் பணம் வாங்கியிருக்கிறார். அடுத்த சில மாதங்களில் பணத்தை செல்வகுமார் திருப்பிக் கேட்டிருக்கிறார் செல்வகுமார். ‘இப்போதுதான் பிஸினஸ் பிக்அப் ஆகி வருகிறது. விரைவில் கொடுத்துவிடுகிறேன்’ என்று சத்யா கூறியிருக்கிறார்.
ஆனாலும் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்திருக்கிறார் செல்வகுமார். மேலும், சத்யாவுக்கு போன் செய்து, குடும்பத்தை ஒருமையில் திட்டவும் செய்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமான சத்யா பதிலுக்கு பேச… வெங்கடேசபுரத்தில் உள்ள பியூட்டி பார்லருக்குச் சென்று சத்யாவை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார் செல்வகுமார்.
இதில் காயமடைந்த சத்யா சிசிடிவி புட்டேஜ் ஆதாரங்களைக் கொண்டு பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பெரம்பலூர் காவல்துறையினர் செல்வகுமாரைக் கைது செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம்கூட இதே போன்ற ஒரு சம்பவம், நடந்தது.
மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் ரோட்டில் வில்லேஜ் ரெஸ்டாரன்ட் என்ற உணவகம் செயல்படுகிறது. இங்கு வந்த தி.மு.க.வை சேர்ந்த ஆறு பேர் ஊத்தாப்பம் கேட்டுள்ளனர். ஊத்தாப்பம் இல்லை என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனாலும், மதுபோதையில் இருந்த தி.மு.க.வினர், ஊத்தப்பம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில், ஊழியர்களை தாக்கியதுடன் நில்லாமல் கத்தியால் குத்தவும் முயற்சி செய்துள்ளனர். அதன்பிறகு அக்கம்பக்கத்தினர் வந்து சண்டையை விலக்கியுள்ளனர்.
இதுகுறித்து உணவக உரிமையாளர் முகமதுஅசரத், சிசிடிவி பதிவுகளுடன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மயிலாடுதுறை அருகே மாப்படுகை திமுக ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கருப்பையன் மகன் பிரதாப் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்தி, திவாகர், அருண் உள்ளிட்ட ஆறு நபர்கள் என்பது தெரியவந்தது.
இந்த வரிசையில், சில நாட்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
சென்னை பூவிருந்தவல்லி அருகே கரையான் சாவடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் சிக்கன் பிரியாணி பார்சல் சவாங்கிச் சென்றிருக்கிறார். சிறிது நேரத்தில் தனது நண்பருடன் திரும்பி கடைக்கு வந்த அவர், “ எனக்கு கொடுத்த பிரியாணியில் கறி பீஸே இல்லை!” என்று கூறி சண்டை போட்டிருக்கிறார்.
பின்னர் அந்த கடையில் சப்ளை செய்து கொண்டிருந்த ஊழியர் சாகுல் அமீது என்பவரின் கன்னத்தில் ஆவேசமாக அறைய… அந்த ஊழியர் நிலை குலைந்து போனார். அவருக்கு காது கேட்காமல் போய்விட்டது.
இந்த ரணகள காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து கடை உரிமையாளர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் பூந்தமல்லி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தலைமறைவாக உள்ள கார்த்தியை தீவிரமாக தேடி வருகின்றனர். கார்த்தி, தி.மு.க. இளைஞரணியில் இருக்கிறார்.
“ஆட்சியில் இல்லாதபோதே எளிய மக்களிடம் இத்தனை அராஜகம் செய்கிறார்கள் என்றால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்?” – இதுதான் தி.மு.க.குறித்து மக்கள் கேட்கும் கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *