மத்திய அரசுக்கு பயப்படும் தி.மு.க.!

@ கே. கண்ணன், திருச்சி
கே: பெண்களுக்கு எந்த அளவுக்கு உரிமை கொடுக்கலாம்.?
ப: அடுத்தவருக்கு நாம் என்ன உரிமை கொடுப்பது? அப்படி நினைக்கும்வரை, பிறரது உரிமையை நாம் மதிக்கப்போது இல்லை!
@ ஆர். உதயகுமார், சென்னை
கே: மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சிக்கிறாரே.!
ப: அறிவாலயத்தின் முதல் மாடியில் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரை சி.பி.ஐ. விசாரிக்க… தரை தளத்தில் (அப்போதைய மத்திய ஆளும்) காங்கிரஸ் கட்சிக்கு 64 எம்.எல்.ஏ. சீட்டுகள் கொடுத்தாரே கருணாநிதி… விமர்சிக்க வேண்டிய தருணம் அதுதானே! ஒருவேளை அந்த நினைப்பில் இப்போது விமர்சிக்கிறாரோ!
@ ஆர் கோபாலகிருஷ்ணன், மதுரை
கே: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளதே!
ப: சட்டம் தன் கடமையைச் செய்தது!
@ ஜே. கோபி, டில்லி
கே: ‘சாதாரண வேலைகளுக்குக்கூட பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். கல்வியின் தரம் தாழ்ந்துவிட்டது!’ என்கிறார்களே சிலர்!
ப: பிரிட்டன் நாட்டில், குறைந்த அளவு படிப்பு தேவைப்படும் வேலைகளுக்கும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கிறார்கள். இவர்களது சதவிகிதம் ஐம்பது! கல்வி அறிவு மேம்படும்போது இது போல நடக்கவே செய்யும். இது முன்னேற்றம்தானே ஒழிய, பின்னடைவு அல்ல.
@ என்.ரங்கநாதன், ஸ்ரீரங்கம்
கே: ‘முதல்வர் பதவி கிடைக்கும்!’ என துரைமுருகனுக்கு ஆனந்த சித்தர் அருள் வாக்கு கூறி இயிருக்கிறாராமே..!
ப: அவர் வாக்கு கொடுத்த நேரம், சி.பி.ஐ. பிடியில் சிக்கியிருக்கிறார்களே, துரை முருகனும் அவரது மகன், கதிர் ஆனந்தும்! ( இன்னொரு விசேசம் பார்த்தீரா… சித்தரை துரைமுருகன் சந்தித்து செப்டம்பர் 17. பகுத்தறிவு பகலவன் பெரியார் பிறந்ததினம்!)
@ பா.ஜெயப்பிரகாஷ், கோவை
கே: ‘ரஜினி தேர்தல் பணியைத் துவங்கிவிட்டார்!’ என்கிறாரே அர்ஜூன் சம்பத்!
ப: அதுசரி, இது ரஜினிக்கு தெரியமா?
@ ஆர். ஜெய்வந்த், சென்னை
கே: என் மகன், அறிவியல் பாடம் படிக்க சிரமப்படுகிறான். என்ன செய்வது?
ப: நமது, தமிழே அறிவியல்தான்!
மரங்களை நடும் பொழுது குறிப்பிட்ட அளவு இடைவெளி விடவேண்டும். உதாரணமாக, வாழை மரத்துக்கு, . 8′ × 8′ அளவும், தென்னை மரத்துக்கு 24′ × 24′ அளவும் இடைவெளி விட வேண்டும்.
இதை,
‘தென்னைக்கு தேரோட..
வாழைக்கு வண்டியோட…
கரும்புக்கு ஏரோட….
நெல்லுக்கு நண்டோட…..!’ என்று அழகாகச் சொன்னவர்கள் நம் மூத்தோர். இப்படி எளிமையாக, மொழியுடன் கூடிய அறிவியல் பாடம்தான் மனதில் நிற்கும்.
குறை நம் பிள்ளைகளிடம் இல்லை.. முறையாக சொல்லித்தராத நம் மீது இருக்கிறது!
@ அ.குணசேகரன், புவனகிரி
கே: கிராமப்புறங்களைப் போல நகர்ப்புறங்களிலும் நூறு நாள் வேலை திட்டம் போன்ற ஒன்றை செயல்படுத்த ரங்கராஜன் குழுவினர் முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளதே!
ப: சிறப்பான விசயம். நகர்ப்புறங்களிலும் பலர் வறுமையில் வாடுகின்றனர். இங்கும் பல வேலைகளை செய்யவேண்டியிருக்கிறது. ஆகவே இது அவசியம்தான்.
Rajinikanth and Others At The Inauguration of MGR Statue
@ ஆர்.ஹரி, சண்டிகர்
கே: பிரியங்கா மகன் ரெய்ஹானுக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்போகிறார்களாமே!
ப: தி.மு.க. போல காங்கிரஸும் வாரிசு கட்சிதானே! கொடுக்கத்தான் செய்வார்கள். ( ஒரு தகவல்… ரெய்ஹான் கடந்த தேர்தலில் வாக்களிக்க வரவில்லை!)
@ எல்.ஜானகிராமன், கடலூர்
கே: அப்பாவித்தனம் ஆபத்தானதா?
ப: ஒரு இளம் தம்பதி கடற்கரைக்குச் சென்றார்கள். அங்கு ஒரு ஜோடி, தங்களை மறந்து முத்தத்தில் லயித்திருந்தது.
அதைப் பார்த்த மனைவி, “ அந்த பொண்ணுக்கு அவன் எவ்வளவு ஆசையா முத்தம் கொடுக்கிறான்.. நீங்களும் இருக்கிங்களே … !” என்றாள் ஆதங்கமாக.
அதற்கு கணவன், “ எனக்கும் அந்த பொண்ணுக்கு முத்தம் கொடுக்க ஆசைதான். ஆனால் அவள் ஒத்துக்கொள்வாளா என தெரியாதே!” என்றானாம்.
அதன் பிறகு எந்ன நடந்திருக்கும் என்பது தெரியும்தானே!
இதனால் தெரியவரும் கருத்து.. அப்பாவித்தனம் ஆபத்தே!
@ கே.ராமன், சேலம்
கே: எம்.ஜி.ஆர். போல தாங்களும் முதல்வர் ஆகிவிட வேண்டும் என பல நடிகர்கள் நினைக்கிறார்களே!
ப: இவர்களுக்கு எம்ஜிஆரை தெரியும். ஆனால் அவரது உழைப்பு பற்றி தெரியவில்லை.
பிறந்தது முதல் இளைஞனாகும் வரை வறுமையுடன் போராடினார் எம்.ஜி.ஆர்.
14 படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து, போராடித்தான் நாயகன் ஆனார்.
மளைக்கள்ளன் படம் முலம், அவரது திரைவாழ்வில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. அதற்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்தார்.
தனது திறமையை மேலும் வெளிப்படுத்த, அடுத்தவர் பணத்தில் படம் எடுக்காமல், சொந்தப் பணத்தில் நாடோடி மன்னன் எடுத்து வெற்றி பெற்றார். இந்தப் படத்தை எடுத்து முடித்து வெளியிடும் வரை அத்தனை போராட்டங்களை சந்தித்தார்.
தி.மு.க.வில் சேர்ந்து பல ஆண்டுகள் உழைத்த பிறகே எம்எல்சி பதவி கிடைத்தது. அதன் பிறகே எம்எல்ஏ பதவி
அடிப்படை உறுப்பினராகி 20 ஆண்டுகள் உழைத்து கட்சியின் பொருளாளர் என்ற மூன்றாது இடத்தை அடைய முடிந்தது.
1972ல் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க ஐந்து ஆண்டுகள், இரவு பகலாக உழைத்தார். அதன்பிறகே முதலமைச்சர் என்கிற பதவி.
இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல், முதல்வர் ஆக வேண்டும் என நினைக்கும் நடிகர்கள், தங்களது படங்களில் மட்டுமே ஆக முடியும்.
@ என்.சிவாஜி, மயிலாடுதுறை
கே: நடிகைகளுக்கு மேக் அப் அவசியமா?
ப: மேக் அப் போடுவதற்கு முன் – பின் எடுக்கப்பட்ட, ரம்யா கிருஷ்ணனின் படங்களைப் பாருங்கள்.. பிறகு நீங்களே முடிவு செய்யுங்கள்!
@ ஜே.சிராஜூதீன், பாபநாசம்
கே: மனிதனுக்கு மிகக் கேடு விளைவிக்கும் மதம் எது?
ப: தாமதம்! ( சொன்னவர் கண்ணதாசன்!)
@ எம். சாய் சத்யா, பாண்டி
கே: மத்திய அரசுக்கு, தமிழக அரசு பயப்படுவதாக தி.மு.க. பிரச்சாரம் செய்கிறதே!
ப: இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பது, இந்திய கலாச்சாரத்தை ஆராயும் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியது, விவசாயிகளுக்கான மின் சலுகை தொடரும் என தெரிவித்தது…. இப்படி மாநில உரிமைகளை உயிர்ப்போடு வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் இ.பி.எஸ்.!
ஆனால், முந்தைய தி.மு.க. ஆட்சிதான், அப்போதைய மத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு அடிமையாக இருந்தது.
காங்கிரஸ் அரசு கொண்டுவந்த, உணவு பாதுகாப்பு மசோதா, சிறு குறு வணிக்தில் அந்நிய முதலீடு, மீத்தேன் திட்டம் என எல்லாவற்றுக்கும் தலையாட்டி ஆதரவு அளித்தது தி.மு.க.!
அதற்கும் முன்பாக, கச்சத்தீவை வாரிக்கொடுத்தது, ஈழ இனப்படுகொலையை கண்டுகொள்ளாதது என மத்திய அரசுக்கு பயந்து ஆலவட்டம் வீசியது தி.மு.க.வின் அப்போதைய தலைவர் கருணாநிதியும், இப்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினும்தானே!
ஆனால் அதிமுகவோ, மக்களுக்காக குரல் எழுப்பியதோடு, அதை செயல் வடிவத்திலும் காண்பித்தது.
சட்டப்போராட்டத்தால் காவிரி உரிமை மீட்பு, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முதல்கட்ட வெற்றி, ஜல்லிக்கட்டு உரிமை, மீத்தேன் அபாயத்திலிருந்து காவிரி படுகையை காபபாற்றி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என ஆக்கியது என எத்தனையோ சொல்லலாம்.
ஆகவே எடப்பாடியார்தான் மக்கள் மனதில் கம்பீரமாக நிற்கிறார்! அவரை குறை சொல்லும் ஸ்டாலினை மக்கள் பொருட்படுத்துவதே இல்லை!
@ ஆர்.மணி, ஈரோடு
கே: காதலியை கொண்டாடும் ஆண்கள், மனைவியை அப்படி கொண்டாடுவது இல்லையே..
ப: ‘இயற்கையை கொண்டாடும் மனிதர்கள், ( புயல், வெள்ளம் போன்ற) இயற்கைச் சீற்றத்தைக் கொண்டாடுவதில்லையே!’ என்கிறார் நண்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *