“ பாபர் மசூதி இடிப்புக்கு காங்கிரஸ்தான் காரணம்!” : வைகோ

அரசியல் பிரமுகர்கள் பலர், மக்கள் மறதியை மட்டுமே மூலதனமாக வைத்து, மாற்றி மாற்றிப் பேசி ஏமாற்றுகிறார்கள். அவர்களது கடந்த கால பேச்சை நினைவுபடுத்தினால், அதிர்ச்சி ஏற்படும் அது போன்ற அதிர்ச்சிகள், ‘அது வேற வாய்’ஸ்’ பகுதியில் வெளியாகும். – ஆசிரியர்
பாபர் மசூதி இடிப்பு குறித்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து,“உரிய நியாயம் கிடைக்கவில்லை: சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துவிட்டார்கள்!” ஆவேசமாக அறிக்கை விட்டிருக்கிறார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.
The Lok Sabha Speaker, Shri Somnath Chatterjee speaking at the inauguration of the Eighth meeting of the Commonwealth Chief Election Officers, organised by the Election Commission of India in co-ordination with the Commonwealth Secretariat, in New Delhi on February 24, 2005.
ஆனால்…
வாஜ்பாய் பிரமதமராக இருந்த 1998-99 காலகட்டம். பாராளுமன்றத்தில் பாபர் மசூதி குறித்த விவாதம் நடந்தது.
அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் சட்டர்ஜி, “இந்த விவகாரத்தில் பாஜக தவறு செய்துவிட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்டது அவர்களால்தான்!” என குற்றம் சாட்டினார்.
அதை மறுத்து அப்போது பேசியவர், இதே வைகோதான்.
அவர், “பாஜகவை குறை சொல்லாதீர்கள். இடிப்புக்குக் காரணம் காங்கிரஸ் கட்சிதான். அங்கு, முதல் கோபுரம் இடிக்கப்பட்ட போது காங்.ஆட்சிதான் இருந்தது. அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை; பாதுகாப்பை பலப்படுத்தவில்லை. ஆகவே காங்கிரஸ் கட்சிதான் இந்த விவகாரத்தில் தவறு செய்தது!” என்று அதி தீவிரமாக பாஜக-வை ஆதரித்து, காங்.கட்சியை எதிர்த்து பேசினார் வைகோ.
அப்போது வைகோ, பாஜக-வின் கூட்டணியில் பிரதமர் வாஜ்பாயுடன் நெருக்கமாக இருந்தார்.
இன்னொரு கருத்தையும் அப்போது வைகோ கூறினார்: “சோம்நாத் சாட்டர்ஜி அவர்களே! மேற்குவங்கத்தில் உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியை பாருங்கள். மம்தா பானர்ஜியை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடி நிற்கிறீர்கள்!” என்றும் பேசினார்.
இது குறித்து அரசியல் பார்வையாளர் குமாரிடம் கேட்டபோது, “அதுதான் வைகோ! காலத்துக்கு ஏற்க தன் கருத்தை மாற்றிக்கொள்வார். இப்போது, காங்-கட்சி கூட்டணி. பாஜக எதிர்ப்பு நிலையில் இருக்கின்றார்.
அன்று பாபரி மசூதியை இடிக்க உதவிய காங்.கட்சியை இப்போது குற்றம் சாட்டுவாரா? பாஜக-விற்கு இதில் தொடர்பில்லை என்று இப்போது பேசுவாரா?
வைகோவின் இரட்டை வேடத்துக்கு, சற்றும் குறைந்ததில்லை தி.முக.
மசூதி இடிப்புக்குப் பிறகுதான் பாஜக-வுடன் ஐந்தாண்டு பதவி சுகத்தை அனுபவித்த கட்சிதான் தி.மு.க.!” என்றார்
இதுதான் காலம் சொல்லும் உண்மை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *